பாரவூர்தியின் மின்கலத்திற்கு (பற்றரி) விடும் அமிலத்தை (அசிட்) மதுபானம் என நினைந்து அருந்தியவர் உயிரிழந்துள்ளார்.
காலி பட்டதுவ பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 53 வயதான நபரே உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் அப்பகுதியில் உள்ள வாகன திருத்தகம் (கராஜ்) ஒன்றின் உரிமையாளர் ஆவார். நேற்றைய தினம் பாரவூர்தி (லொறி) மின்கலத்திற்கு அமிலம் மாற்றும் நோக்குடன் மூவர் அதற்கான அமிலத்தை கொண்டு வந்திருந்தனர். அத்துடன் சட்டவிரோத மதுபானத்தையும் கொண்டு வந்துள்ளார்கள்.
அவர்கள் மூவருடனும் உரிமையாளர் சேர்ந்து வாகன திருத்தகத்தில் வைத்து மது அருந்தி உள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் , மேலுமொரு மது போத்தலை எடுத்து மது வருந்துவதாக நினைத்து , அமில போத்தலை திறந்து அதனை அருந்தியுள்ளார். அதனால் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தது வருகின்றனர்.







No comments