Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காணி சொந்தமில்லாத காரணத்தாலையே மலசல கூட வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை!


யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு மலசல கூடம் கட்டிக்கொடுக்காதமைக்கு காரணம் ,  அவர்கள் வசிக்கும் காணி அவர்களுக்கு சொந்தமில்லை என்பதால் தான் என உடுவில் பிரதேச செயலர் எஸ்.முகுந்தன் விளக்கமளித்துள்ளார். www.tamilnews1.com 

புன்னாலைக்கட்டுவான் கப்பன்புலவு பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் மலசல கூட வசதிகள் இல்லாத காரணத்தால் வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள பனங்காணிக்கு சென்று காலை கடனை முடித்து விட்டு திரும்புகையில் இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.   www.tamilnews1.com 

அதேவேளை அங்கு வசிக்கும் குடும்பங்கள் மலசல கூட வசதிகள் அற்ற நிலையில் பெரும் சிரமங்களுடன் வசித்து வருவதாகவும், மலசல கூடங்களை கட்டி தருமாறு அரச அதிகாரிகள் , அரச சார்பற்ற நிறுவனங்கள் , தன்னார்வ கொடையாளர்கள் என பலரிடம் கேட்டும் மலசல கூடங்கள் கட்டிக் கொடுக்கப்படவில்லை எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் குறித்த செய்தி தொடர்பில் உடுவில் பிரதேச செயலர் எஸ்.முகுந்தன் தெரிவிக்கையில் ,   www.tamilnews1.com 

கப்பன்புலவு பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவர்களுக்கு உரித்துடையதல்லாத காணிகளில் அரைநிரந்தர அல்லது தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.   www.tamilnews1.com 

அரச சுற்று நிரூபங்களின் பிரகாரம் காணி உரித்துடையவர் அல்லாதோருக்கு அல்லது காணி உரிமையை உறுதிப்படுத்தாதவர்களுக்கு கட்டடத்திற்கான உதவிகளை செய்ய முடியாது. அதனாலையே அவர்களுக்கான மலசல கூடங்களை காட்டிக்கொடுக்க முடியவில்லை.   www.tamilnews1.com 

காணியின் உரிமையாளர் அங்கு வசிக்கும் மக்களுக்கு காணிகளை பகிர்ந்து அளிப்பதன் ஊடாகவோ அல்லது அங்கு வசிப்போர் தமது காணி க்கானஉரித்தை உறுதிப்படுத்துவார்கள் ஆயின் அவர்களுக்கு மலசல கூட வசதிகளை செய்து கொடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என தெரிவித்தார்


No comments