Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

28 மனைவிகளின் முன் 37வது திருமணம் செய்து கொண்ட முதியவர்! (காணொளி இணைப்பு)


முதியவர் ஒருவர் தனது 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது மனைவியை திருமணம் செய்து கொண்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  www.tamilnews1.com 

இது குறித்து ரூபர் சர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் முதியவர் ஒருவருக்கு இளம் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது.  www.tamilnews1.com 

அந்த வீடியோ பதிவிடும் போது அவர் அதில் “தைரியமான மனிதர், 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்” என குறிப்பிட்டுள்ளார்.  www.tamilnews1.com 

இந்த திருமணம் எங்கு நடந்தது? இந்த திருமணத்தை செய்தது யார்? இதில் குறிப்பிட்டிருப்பது உண்மை தானா என்ற விபரங்கள் தெரியவில்லை.

ஐபிஎஸ் அதிகாரி இந்த வீடியோவை ஷேர் செய்து இவ்வாறு குறிப்பிட்டதால் இது உண்மை என பலர் நம்புகின்றனர். ஆனால் இந்த திருமணத்திற்கு இந்த வீடியோவை தவிர வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த வீடியோவை பலர் பகிர்ந்து, கருத்திட்டு வைரலாக்கி வருகின்றனர். பலர் இப்படி ஒர திருமணம் நடந்ததாக தன்னால் நம்பமுடியவில்லை எனவும் கருத்திட்டுள்ளனர்.

www.tamilnews1.com 

No comments