ருவான்வெல்ல பிரதேச செயலர் பிரிவுக்ககுட்பட்டவர்களுக்கு சைனோபாம் கொரோனா தடுப்பு ஊசி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கரவநெல்ல வெந்தள பௌத்த விகாரையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ கலந்துகொண்டு பார்வையிட்டதுடன், இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கனகஹேராத் , கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதத்மஞ்சுல ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், நுவரெலியா, மாத்தளை, பதுளை மாவட்டங்களிலும் இன்று கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளும் மாத்தளை மாவட்டத்திற்கும் 25 ஆயிரம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









No comments