கடந்த சில தினங்களில் 17 கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று(செவ்வாய்கிழமை) காலை இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக கல்பிட்டி முதல் ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பகுதிகளில் கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருவது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது குறித்து, நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை , மூன்று டொல்பின்கள் இறந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது







No comments