Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் யாழுக்கு விரைவில் அனுப்ப நடவடிக்கை!


யாழ்.மாவட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு காட்டும் அக்கறையை வரவேற்கிறோம். மூன்று நாட்களில் 50 ஆயிரம் தடுப்பூசிகளை யாழ்.மாவட்ட மக்கள் பெற்றுள்ளனர் என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும்  கூறுகையில்,

இராணுவத்தினர் உள்ளிட்ட கொரோனாத் தடுப்புச் செயலணியினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆகியோருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி முதல் கட்ட கொரோனாத் தடுப்பூசிகளை யாழ்.மாவட்ட மக்கள் பெற்றுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் ஊடாகத்தான் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சாராதவர்களும் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளனர்.

இதனால் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் விரைவாக முடிவடைந்துள்ளன. இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் விரைவில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்படும். 

அதேவேளை, வடக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களிலும் கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments