சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி (ஜூன்) இலங்கை மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவர்களது படகிற்கு அருகில் சென்ற இந்திய கடற்படையினர் , மீனவர்களின் படகினுள் ஏறி , மீனவர்களிடம் போதைப்பொருள் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்தியதாகவும் அதில் காயமடைந்த மீனவர்களில் மூவர் நேற்றைய தினம் நீர்கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். www.tamilnews1.com
குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அந்த செய்திகளில் உண்மை இல்லை என இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை மூலம் மறுத்துள்ளது. www.tamilnews1.com







No comments