தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் அழைத்து செல்லும் போது பொலிஸ் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பிக்க முயற்சித்த நபர் உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
பாணந்துறை வடக்கு, வத்தல்பொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் ஓடும் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். www.tamilnews1.com
இதன்போது படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (06) மாலை உயிரிழந்துள்ளார்.
அது தொடர்பிலான விசாரணைகளை பாணாத்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். www.tamilnews1.com
இதேவேளை குறித்த சம்பவத்தை அடுத்து பாணாத்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜென்ட் ஆகிய இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என
பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
www.tamilnews1.com







No comments