நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் நடமாடுவோரை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.
பயண கட்டுப்பாட்டை மீறுவோரை அடையாளம் கண்டு அவரை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். பொலிஸ் அதிகாரிகளால் தனிமைப்படுத்த முடியாது என்பதால் பொலிஸாரின் வேண்டுகோளின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.







No comments