Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நிலவும் சீரற்ற காலநிலையால் மூவர் உயிரிழப்பு - ஒரு இலட்சத்து 33,280 பேர் பாதிப்பு!


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 31,990 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33,280 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் , மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளார் , இரண்டு பேர் காணாமற்போயுள்ளனர், ஏழு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 468 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாகவும், 33 பாதுகாப்பு நிலையங்ளில் 1,145 குடும்பங்களைச் சேர்ந்த 5,182 தங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 

இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களே  பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 நலன்புரி மத்திய நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  குறித்த மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரதேசங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கடற்படை 13 நிவாரண குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

இதேவேளை, பயண கட்டுப்பாடு காரணமாகவும், மழையுடன் கூடிய காலநிலையாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவை பகிர்ந்தளிக்கும் வேலை திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

தவளம, நெலுவ ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி உணவு பொருட்களை வீடுகளுக்கு சென்று பகிர்ந்து அளிக்க மாத்தறை மாவட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலன்நறுவை மாவட்டத்தில் 9 கூட்டுறவு சங்கங்கள் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை பகிர்ந்தளித்து வருகின்றன என குறிப்பிடபப்ட்டுள்ளது. 

No comments