கோவிட்-19 நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. www.tamilnews1.com
அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரித்தில் ஈடுபட்ட வியாபாரியை அச்சுறுத்தி கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் கையூட்டுப் பெற்றுள்ளனர். www.tamilnews1.com
பணத்தை வழங்கிய மீன் வியாபாரி தனது பகுதி கிராம அலுவலகர் ஊடாக நல்லூர் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர்மட்டத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கையூட்டுப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை மீன் வியாபாரி அடையாளம் காட்டியுள்ளார். www.tamilnews1.com
மேற்கொண்டு விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பில் இடம்பெற்று வருகின்றன. www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments