இடர்கால தனிமையை போக்குதல் , சிறார்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையிலும் புத்தாக்க அரங்க இயக்கத்தினரால் இணையவழி தனிநடிப்புப்போட்டி மற்றும் குறு நாடக பிரதியாக்கப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.அதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள முடியும்.
இரு போட்டிகளிலும் முதல் மூன்று நிலைகளினை பெறுபவர்களிற்கு பதக்கத்துடன் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும்.
தனிநடிப்பு போட்டி நிபந்தனைகள் பின்வருமாறு
கீழ்பிரிவு வயது (11-14)
மேற்பிரிவு வயது (15-18)
ஆர்வமுள்ள அனைவரும் போட்டியில் பங்குபற்ற முடியும்.
போட்டிக்கான கரு
சமூகத்தில் காணப்படுகின்ற கதைக்கருக்களினை கொண்டவகையில் பொருத்தமான வெளிப்பாட்டுமுறையில் தனிநபர்களையோ,சமூகத்தையோ புண்படுத்தாதவகையில் தனியாள் ஆற்றுகைகள் அமைதல் வேண்டும்.
தற்போது உலகம் முகம்கொடுக்கின்ற நெருக்கீடான கொவிட்-19 பிரச்சினையை மையப்படுத்தியதாகவும் சமூகத்திற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தனி நடிப்பு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
கால அளவு 3-5 நிமிடத்திற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
தனிநடிப்பினை வீடியோவாக பதிவு செய்து +94779596710 எனும் வாட்சப் இலக்கத்திற்கு அல்லது 0779773538 வைபர் இலக்கத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
புள்ளித்திட்டம் வருமாறு
கரு 25 புள்ளிகள்
நடிப்பு 35 புள்ளிகள்
பொருத்தமான வேடப்புனைவு 20புள்ளிகள்
வெளியினை கையாளுதல் 15 புள்ளிகள்
நேரம் 05 புள்ளிகள்
பெற்றோரது உறுதிப்படுத்தலுடன் போட்டியில் பங்குபற்றமுடியும்.
வீடியோக்கள் கிடைக்வேண்டிய நிறைவுநாள் 15.07.2021
குறுநாடகப் பிரதியாக்கப்போட்டி -2021
மாணவர்களிடையே ஒளிந்திருக்கின்ற நாடக எழுத்தாக்க திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் குறு நாடக பிரதியாக்கப் போட்டி நிகழ்த்தப்படவுள்ளது.
நாடகத்திற்கான தலைப்பு
கொறோனாவற்ற தாய் நாடு
முகக்கவசம் எங்கள் உயிர்கவசம்
சமூக இடைவெளி பேணுவோம்
பிரிவு 1 வயது 14- 17
பிரிவு 2 வயது 18-20
நாடக பிரதியாக்கத்தில் கொச்சைத்தனமான மொழிப்பிரயோகம்,வன்முறையான ,ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும்.
10 நிமிடங்கள் ஆற்றுகை செய்யக்கூடிய வகையில் பிரதியாக்கப்படவேண்டும்
பிரதியினை மதிப்பீட்டிற்கு உட்படுத்துகின்ற மதிப்பீட்டாளர்களினால் வெற்றி பெற்ற வெற்றியாளருக்கு மேற்பட்டவகையில் தரமான பிரதிகள் ஆக்கியவர்களாக கருதப்படுகின்றவர்களிற்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும்.
இருபிரிவிலும் முதல் மூன்று நிலைகளினை பெற்ற வெற்றியாளர்களின் பிரதிகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்துகின்ற வகையில் நூலாக புத்தாக்க அரங்க இயகக்கத்தினால் வெளிக்கொண்டு வரப்படும்.
பிரதியாக்கத்திற்கான புள்ளிகள் பின்வரும் வகையில் வழங்கப்படும்.
• கரு 30 புள்ளி
• மொழிநடை 25 புள்ளி
• பாத்திரவார்ப்புத்திறன் 20 புள்ளி
• மேடைக்குறிப்பு 15 புள்ளி
• எளிமையாக நாடகவாக்கக்கூடிய தன்மை 10 புள்ளி
குறுநாடகப் பிரதிகள் dramaarul@gmail.com com , Kumarandrama@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.07.2021இற்கு முன்பாக அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்கள் பின்வரும் மாதிரியில் தயாரிக்கப்படவேண்டும்.
பெயர்:-
முகவரி:-
பால்நிலை:-
பிறந்த திகதி:-
வயது:-
போட்டியின்பெயர்:-
எனது படைப்பு சொந்தப் படைப்புஎனவும் என்னால் சுயமாக தயாரிக்கப்பட்டது எனவும் உறுதிப்படுத்துகின்றேன்.
போட்டியாளரது ஒப்பம்:-
எனது பிள்ளை போட்டியில் பங்குபற்றுவதற்கு சம்மதிக்கின்றேன் பெற்றோர் ஓப்பம்:-
மேலதிக விபரங்களை 0779596710 ,0779773538 ஆகிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.







No comments