Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தடுப்பூசியை பெற மக்கள் ஆர்வம் - நேற்று 71 வீதமானோர் தடுப்பூசியை பெற்றனர்!


கோவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 892 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 70.99 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 83 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு ரீதியாக 11 கிராம அலுவலகர் பிரிவுகளில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நேற்று  19 ஆயிரத்து 569 பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 13 ஆயிரத்து 892 பேர் இன்று தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 70.99 சதவீதமானோர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களில் 22 ஆயிரத்து 952 பேர் கோவிட்-19 தடுப்பூசி மருந்தை ஏற்றியுள்ளனர் என தெரிவித்தார். 

No comments