பாணாத்துறை பகுதியில் உள்ள அழகுக்கலை நிலையத்திற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த மூன்று பெண்கள் அங்கிருந்த அழகுக்கலை நிபுணரான பெண்ணொருவரை தாக்கி , அவரது தலைமுடியையும் கத்தரித்துள்ளனர். www.tamilnews1.com
தாக்குதலுக்கு இலக்கான பெண் பாணாத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , தாக்குதலாளிகளான மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
மொறட்டுவா உயான பகுதியை சேர்ந்த 40 வயதான தாய் , 17 வயதான மகள் மற்றும் 31 வயதான மருமகள் முறையான பெண் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
தனது கணவனுடன் அழகுக்கலை நிபுணரான பெண் தகாத உறவு வைத்திருப்பதாக கூறியே தனது மகள் மற்றும் மருமகளுடன் குறித்த பெண் அழகுக்கலை நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளார்.
குறித்த மூன்று பெண்களும் அழகுக்கலை நிபுணரை தாக்கும் போது அழகுக்கலை நிபுணரின் கணவன் மற்றும் இரு மகன்களுமே தாக்குதலாளிகளான மூன்று பெண்களிடம் இருந்தும் அழகுக்கலை நிபுணரை காப்பாற்றியுள்ளனர். www.tamilnews1.com
இருந்த போதிலும் அழகுக்கலை நிபுணரை தாக்கிய பெண்கள் அவ்ரது ஆடைகளை கிழித்தும் அவரது தலைமுடியையும் கத்தரித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் தனது கிழிந்த ஆடை , கத்தரிக்கப்பட்ட தலைமுடி மற்றும் கத்தரிக்க பயன்படுத்திய கத்தரிக்கோல் என்பவற்றுடன் பாணாத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு இன்று (14) காலை சென்று முறைப்பாடு செய்துள்ளார். www.tamilnews1.com
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தாக்குதலாளிகளான மூன்று பெண்களையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
www.tamilnews1.com







No comments