Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சேவை நீடிப்பு கோரி பலாப்பழத்துடன் சென்ற அதிகாரி!




யாழில் இருந்து கொழும்புக்கு நல்லெண்ணெய் , கறுத்தக்கொழும்பான் மாம்பழம் கொடுத்து காக்க பிடிக்கும் பாரம்பரியத்தில் தென்மராட்சியில் இருந்து வடக்கின் உச்ச அதிகாரம் கொண்டவருக்கு பிக்கப் வாகனத்தில் பலாப்பழம் கொடுத்து சேவை நீட்டிப்பு பெற உயர் அதிகாரி ஒருவர் முனைந்துள்ளமை தற்போது அந்த அதிகாரியின் அலுவலகத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது. 

வடமாகாண பிரதம செயலாளர் ஓய்வு பெற உள்ள நிலையில் அடுத்த செயலாளருக்கான தெரிவுக்காக பல தரப்பு போட்டி காணப்படுகிறது. இதற்காக சிலர் பயணத்தடைகளை மீறியும் கட்சி அலுவலக படிகளில் ஏறி இறங்கி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போதைய செயலாளருக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கப்படலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. 

இவ்வாறாக அடுத்த பிரதம செயலாளர் யார் ? என்பதற்கான பலதரப்பு போட்டிகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில்,  வடமாகாண திணைக்களம் ஒன்றின் அதிகாரி அரச வாகனமான தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் தென்மராட்சியில் இருந்து பலாப்பழங்களை ஏறிச்சென்று, வடக்கின் உச்ச அதிகாரம் கொண்டவருக்கு வழங்கி , தனது சேவை நீடிப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரியுள்ளார். 

யாழில். தென்மராட்சி பக்க பலாப்பழங்கள் சுவை அதிகம் என ஏற்கனவே கேள்விப்பட்ட குறித்த நபரும் அதனை வாங்கிக்கொண்டு அவரது கோரிக்கையையும் காதில் வாங்கிகொண்டுள்ளார். 

No comments