குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகள், உள்ளிட்ட அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிட்டு நீதியை வழங்கவேண்டும். என அமைச்சர் நாமல் ராஜபக்சே நாடாளுமன்றில் கோரியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ,
நீண்டகாலமாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்கவேண்டும் என நீதியமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். எனது வயதை விட அதிக காலம் சிலர் சிறையில் உள்ளனர். அவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும். அல்லது சந்தேகநபர்களிற்கு புனர்வாழ்வளிக்கவேண்டும். அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் கடுமையான தன்மை காரணமாக பிணை வழங்க முடியாது என்பதால் சட்டமா அதிபர் தலையிடவேண்டும் என தெரிவித்தார்.







No comments