கொலன்னாவை நகர சபை உறுப்பினர்கள் இருவர் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள நெற்களஞ்சியசாலை ஒன்றில் இருந்து இயந்திரமொன்று காணாமல் போயுள்ளதாக கடந்த 11 ஆம் திகதி வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய , குறித்த இயந்திரத்தை கொள்வனவு செய்த மற்றும் அதனை கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு மன்றின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு வெல்லம்பிட்டி பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலன்னாவை நகரசபை உறுப்பினர்களான 50 மற்றும் 52 வயதுடைய இருவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.







No comments