நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் 10 மாவட்டங்களில் உள்ள 84 பிரதேச செயலக பிரிவுகளில் 60 ஆயிரத்து 674 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 45ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் ஜந்து பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் ,புத்தளம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் ஒருவரும் ,கம்பாஹா மாவட்டத்தில் இருவரும் ,களுத்துறை மாவட்டத்தில் ஒருவரும் ,காலி மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 14 பேர் உயிரிழந்திருப்பதுடன் இருவர் காயமடைந்திருப்பதுள்ளனர். மேலும், இருவர் காணாமற் போயிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 14 வீடுகள் முழுமையாகவும் 817 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 3 520 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 658 பேர் தற்காலிக பாதகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.







No comments