மருத்துவர்களுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் மற்றும் எந்தவித மேலதிக கொடு ப்பணவுகளும் தமக்கு அரசினால் வழங்கப்படுவதில்லை என்று கேகாலை , கரவனல்ல ஆதார வைத்தியசாலை தாதியர்களும்
சிற்றூழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
குறித்த கோரிக்கையை முன்வைத்து இன்று காலை 7 மணி தொடக்கம்மதியம் 1 மணிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் சிற்றுழியர்களுக்கு சுகாதார முறைப்படி சரியான பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக தாதியர் ஒருவர் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சேவை செய்யும் வைத்தியர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த மேலதிக கொடுப்பனவுகள் குறித்த தாதியர்களுக்கோ சிற்றூழியர்களுக்கோ வழங்கப்படவில்லை. அத்துடன் சுகாதார அமைச்சர் மேலதிக கொடுப்பனவு தரமுடியாது என்ற காரணத்தினால் இந்த முன்னெடுப்பு போராட்டத்தை இன்று ஏற்பாடுசெய்தோம். இதுதொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்க தவறும் பட்சத்தில் எமது கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டார்.
படங்கள் : ரொசான்










No comments