அம்பாறையில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த போது , கொள்கலன் (பரல்) வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை வளத்தாப்பிட்டியை சேர்ந்த ஏகாம்பரம் தங்கவேல் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள வயல் வெளியை அண்டிய பகுதியில் மூவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் போது கசிப்பு சேகரித்து வைத்திருந்த கொள்கலன் (பரல்) மீது தீ பிடித்ததில் அது வெடித்து சிதறியதால் சம்பவ இடத்திலையே அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







No comments