தமது மகனுக்கு சுகவீனம் என கூறி சொகுசு வாகனத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 22 இலட்ச ரூபாய் பணம் , 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பவற்றை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் , தமது 5 வயது பிள்ளைக்கு சுகவீனம் , வைத்திய சாலைக்கு அழைத்து செல்வதாக , பிள்ளையை துணியினால் சுற்றி வாகனத்தின் ஆசனத்தில் அமரவைத்து பொலிஸ் சோதனை சாவடியை கடந்து சென்றுள்ளனர்.
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொலிஸார் அவர்கள் பயணித்த வாகனத்தை பின் தொடர்ந்து சற்று தொலைவில் வாகனத்தை இடைமறித்து சோதனைக்கு உட்படுத்த முயன்றுள்ளனர்.
அதற்கு தம்பதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்தனையும் மீறி பொலிஸார் வாகனத்தை சோதனைக்கு உட்படுத்திய போது , வாகனத்தில் இருந்து 22 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 55 கிராம் ஹெரோயின் என்பவற்றை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து காரில் பயணித்தவர்களிடம் சோதனையிட்ட போது பெண்ணின் உடைமையில் இருந்து 5கிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







No comments