நாடாளுமன்றினுள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றஉறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (23) காலை நாடாளுமன்றம் கூடியது. அதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அதனை அடுத்து , எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.







No comments