நாவற்குழியில் தொடருந்து பாதையில் இருந்த தண்டவாள பொருத்துக் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கி குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 14ஆம் திகதி தண்டவாளப் பாதையில் உள்ள பொருத்துக் கிளிப்புகள் திருடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், திருடப்பட்ட தொடருந்து தண்டவாள கிளிப்புகளை கொள்வனவு செய்து உடமையில் வைத்திருந்த ஐந்து சந்தியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். www.tamilnews1.com
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அரியாலையைச் சேர்ந்த 24 வயதுக்குட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். www.tamilnews1.com
சந்தேக நபர்கள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிளிப்புகள் கழற்றப்பட்ட நிலையில் தொடருந்து பயணித்தால் தடம்புரளும் ஆபத்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
www.tamilnews1.com






No comments