அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றுக்கு செல்லும் வழியில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் , பெண்கள் என வேறுபாடுகள் இன்றி பலரை வலுக்கட்டாயமாக பொலிஸார் கைது செய்துள்ளனர். www.tamilnews1.com
கைது செய்யப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று வாகனங்களில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இலங்கை ஆசிரியர் சங்க
பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் , இரண்டு பிக்குகள் , இரண்டு பெண்கள் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். www.tamilnews1.com
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரேரணைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
முந்தைய அரசின் கீழ் 2018 இல் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை சர்ச்சைக்குரியது என ஜனந்த விமுக்தி பெரமுனா (ஜேவிபி) உள்ளிட்ட இடதுசாரி எதிர்க்கட்சிகள் இலங்கையில் உயர்கல்வியை இராணுவமயமாக்க வழிவகுக்கிறது என்று குற்றம் சாட்டின இருந்தமை குறிப்பிடத்தக்கது. www.tamilnews1.com












No comments