முல்லைத்தீவில் இளம் தம்பதியினர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மல்லாவி அனிஞ்சியன் குளம் பகுதியை சேர்ந்த ரஞ்சன் பிரதீபன் (வயது 31) மற்றும் பிரதீபன் மாலினி (வயது 27) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரும் அப்பகுதியில் உள்ள வெதுப்பகத்தில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் முடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments