மதுரங்குளி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடத்திய மணமக்கள் உள்ளிட்ட 28 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று முந்தல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள போது, மதுரங்குளிய - கனமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமணம் நடைபெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி, பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த போது ஒரு குழுவினர் தப்பி ஓடியுள்ளனர். அந்த இடத்தில் இருந்த 09 குடும்பங்களைச் சேர்ந்த 28 நபர்களை அந்த வீட்டில் தனிமைப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







No comments