மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வவுனியா - ஒலுமடு பகுதியில் , இம்மாதம் 24 ஆம் திகதி வவுனியா ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில் மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது.
பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதனையடுத்து புளியங்குளம் வைத்தியசாலைக்கு சென்று அன்ரியன் பரிசோதனை மேற்கொண்டபோது , இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வவுனியா வடக்கு சுகாதார பிரிவினரால் மரணசடங்கில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு இன்றையதினம் (30) அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .







No comments