பதுளை வைத்தியசாலையில் நாளுக்கு நாள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்படுவதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் 3 வைத்தியர்கள் உட்பட 15 சுகாதார ஊழியர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளரும், பதுளை வைத்தியாலையின் வைத்தியருமான பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற வந்த 60 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 38 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் அவதானம் காரணமமாக 4 வார்டுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் நாளுக்கு நாள் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்கள் காரணமாக வைத்தியசாலையில் தீவிர சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்தார்.
No comments