Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொலிஸார் கைது செய்த போது உயிரிழந்த சந்தேக நபருக்கும் கொரோனோ!


பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது , உயிரிழந்த சந்தேக நபருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. 

மத்துகம பொலிஸாரினால் கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது , அப்பகுதியை சேர்ந்த குற்ற செயல்களுடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 
 
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது , திடீரென மயங்கி சரிந்துள்ளார். அவரை பொலிஸார் வேன்தேவ  வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டிருந்தனர். 
 
அதன் பின்னர் அவரது சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. 

No comments