திருகோணமலை- மடத்தடி சந்தியில் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com
கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக ஒன்றிணைந்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மடத்தடி சந்தியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி, வட கரை வீதியூடாக திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தை சென்றடைந்து, அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் நாட்டின் தலைவர்களது முகமுடிகளை அணிந்து, ஆடைகளைக் குறிக்கும் வகையில் வேடமிட்ட சிலர் பிரேதப் பெட்டி ஒன்றினை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. www.tamilnews1.com
அரசானது குறித்த சட்டமூலத்தினை திருத்தி, இலவசக் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர், அவர்கள் அவ்விடத்தினை விட்டு கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
www.tamilnews1.com






No comments