Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடமராட்சி கடலில் 109 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!


கடற்படையினால் தொண்டைமானாறு பிரதேசத்திலிருந்து மாமுனை வரையான கடற்பகுதியில்  மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலேயே , 109 கிலோ 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படட்டுள்ளனர்.


 கடற்படை P 177 கடலோர பாதுகாப்பு கப்பல் மூலம் தொண்டைமானாறு முதல் மாமுனை கடற்கரையில் நேற்றையதினம் (31) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த இரண்டு சந்தேகநபர்கள், 2 பொதிகளில் அடைக்கப்பட்ட கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த  பகுதியில் P015 கடலோர பாதுகாப்பு ரோந்துப் படையினர் நடாத்திய மேலதிக தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அப்பகுதியில் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட கேரளா கஞ்சா பலரையும்  மீட்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொத்தமாக 109 கிலோகிராம் மற்றும் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த  நடவடிக்கையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி  ரூ. 32 மில்லியனுக்கும் அதிகமென தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், 26 மற்றும் 28 வயதுடைய பருத்தித்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றிய பொருட்களையம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை கடற்படையினர் மேற்கொண்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன



No comments