தந்தை உழவு இயந்திரம் மூலம் புல்லு வெட்டிக்கொண்டிருந்தை பார்க்க வந்த 3வயது சிறுமி உழவு இயந்திரத்திற்க்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பள்ளம சேருகெலே பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தையார் உழவு இயந்திரத்தின் மூலம் புல்லு வெட்டிக்கொண்டிருந்த வேளை அவரது 3 வயது மகள் தந்தையிடம் ஓடி வந்த போது எதிர்பாராத விதமாக உழவு இயந்திரத்தினுள் சிக்கியுள்ளார்.
அதனால் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , சிறுமி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பள்ளம பொலிஸார் உழவு இயந்திரத்தை இயக்கிய தந்தையாரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments