ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் , வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை அவர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முத்து காரில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்ததை அடுத்து , பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவர்களின் காரை பின் தொடர்ந்து பரமேஸ்வர சந்திக்கு அருகில் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது காருக்குள் இருந்து 3கிராம் ஹெரோயின் போதைப்பொருளை , வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து காரில் இருந்த முத்து உள்ளிட்ட நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments