Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தொழில் இழந்த முடி திருத்துனர் - ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது!


இரத்தினபுரி- மஹவலவத்த சிவன் கோவிலிலுள்ள காளிச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைய, குறித்த நகைகள், நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கோவிலிலுள்ள காளி சிலையிலிருந்து நகைகள் காணாமல் போயுள்ளதாக இந்த மாதம் 17ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கமைய, சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த கைரேகைகள் மற்றும் ஏனைய சாட்சிகளைக் கொண்டு 3 பிரிவுகளாகப் பிரிந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், நிவித்திகல நகரிலுள்ள அடகு நிலையத்தில் சில தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய முடி திருத்துனராக தொழில் செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

கொரோனா தொற்றால் தமக்கு தொழில் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தான் தொடர்ச்சியாக நிவித்திகல பிரதேசத்திலுள்ள 7 கோவில்களிலுள்ள சிலைகளின் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த முடி திருத்துனர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட நகைகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments