வாயை மூடி பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பன்னல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வரகாபொல துல்ஹிரிய பகுதியில் மாஓயாவில் சடலம் ஒன்று காணப்படுவதாக வரகாபொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்திற்கு அருகில் காணப்பட்ட அவரது அடையாள அட்டையின் அடிப்படையில் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டார்.
குறித்த நபரை கடந்த 10ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி பன்னல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது






No comments