முல்லைத்தீவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் கடுமையான தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது அவரின் கணவனே தீ மூட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் , கணவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு அனிஞ்சியன்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இரண்டரை வயது பிள்ளையின் தாயான 22 வயது பெண் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டார் என கணவனின் தாயார் தெரிவிக்கின்றார்.
அதேவேளை அப்பெண்ணின் தாயார் , குடும்ப தகராறு காரணமாக தனது பெண்ணை அவரது கணவனே தீ மூட்டி படுகொலை செய்ய முயற்சித்தார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்நிலையில் அப்பெண்ணின் கணவனை மல்லாவி பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் அவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.






No comments