Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

திருகோணமலை படகு விபத்தின் எதிரொலி - நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு உடைப்பு!


படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த படகு சேவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறினார் என குற்றம் சுமத்தியே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் நால்வர் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் 

இன்றுக்காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால், கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனும் அச்சம் காணப்படுகிறது. 

இந்நிலையில் படகு விபத்தினை அடுத்து , அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலைமை காணப்பட்டது. மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்ததுடன் , வீதிகளில் டயர்களை கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்நிலையிலையே திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.





No comments