Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

திருகோணமலை படகு விபத்து - வீதியில் டயர் கொளுத்தி போராட்டம்


திருகோணமலை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில்  பதற்ற நிலைமை ஏற்ட்டுள்ளது.   கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

திருகோணமலை கிண்ணியா பகுதியில் குறிஞ்சாங்கேணி பகுதியில் பாலம்  அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் மக்களுக்கான போக்குவரத்துக்காக குறித்த  ஆற்றினை கடப்பதற்கு இழுவவை படகினை பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
தினமும் இந்த இழுவைபடகின் ஊடாக   நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டுவந்த நிலையில் இன்று காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
 
இருந்த போதிலும் கிண்ணியா மக்களின் நீண்டநாள் கனவாக காணப்படும் இந்த பாலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த பாலம் 750 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட வந்த நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த விபத்தில் 4 மாணவர்கள் உள்ளிட்டவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
அதேவேளை மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணிகளை கடற்படையினர் , பொலிஸார் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.







No comments