Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.பல்கலை விவசாய உயிரியல் துறை சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய உயிரியல் துறை சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

காளான் உற்பத்தி மற்றும் பதனிடல் தொழிநுட்பம் , மண்புழு தொழிநுட்பம் ஆகிய இரு கற்கை நெறிகளுக்குமே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

06 மாதங்களை கொண்ட குறித்த கற்கை நெறியானது வார இறுதிநாட்களில் நடைபெறும். தமிழ் மொழி மூலம் நடைபெறும் இக் கற்கை நெறிக்கு தரம் 09 வரையில் கல்வி கற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஒரு கற்கை நெறிக்கான கட்டணமாக 08ஆயிரம் ரூபாய் அறவிடப்படும். 

விண்ணப்படிவங்களை www.agri.jfn.ac.lk  எனும் இணையத்தளத்திலையோ அல்லது யாழ்.பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். 

விண்ணப்பதாரிகள் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் , தமது தகைமைகளை உறுதிப்படுத்தும் ஆவண பிரதிகளையும் இணைத்து எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் பீடாதிபதி , விவசாய பீடம் ,யாழ்.பல்கலைக்கழகம் , கிளிநொச்சி வளாகம் , அறிவியல் நகர் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள இணைப்பாளர் கலாநிதி க.பகீரதன் அவர்களுடன் 0212060171 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். 

No comments