Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு


தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டத்திற்கமைய, பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயிறு பயிர்ச்செய்கைத் திட்டத்தினொரு கட்டமாக இன்று காலை 9.30 மணியளவில் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்டம் முழுவதும் 8 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 469 கிலோ பயறு 546 பயனாளிகளுக்கும் 3263 கிலோ உழுந்து 903 பயனாளிகளுக்கும் 1632 கிலோ இஞ்சி 64 பயனாளிகளுக்கும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ த சில்வா ,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன், யாழ் மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், கமநல சேவை உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







No comments