யானைகளை விரட்ட பயன்படுத்தப்படும் வெடி பட்டதில் , இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , பிக்கு ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு மலையடிவாரம் எனும் இடத்தில் கடந்த 2ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 குறித்த சம்பவத்தில் வெலிகந்த பகுதியை சேர்ந்த ஹேரத் முதியன்செலாகே சிசிர குமார (வயது 27) எனும் இளைஞனே  உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த விகாராதிபதி பொலநறுவை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , கேஸு பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று போதையில் ஓமானியாமடு விகாராதிபதியுடன் முரண்டப்பட்டுள்ளனர். 
அதனை தொடர்ந்து யானைகளை விரட்ட பயன்படுத்தும் வெடிகளை கொளுத்தி வீசியுள்ளனர். அதன் போது வெடி பட்டதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். விகாராதிபதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 




 
 
 
No comments