Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காத்தான்குடியில் போலி சி.ஐ.டி கைது!


திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரிய போலி சி.ஐ.டி ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில் அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
 
இதன் பிரகாரம் குறித்த திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொள்வதற்காக குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபர் வீட்டில் இல்லாமையினால் மீண்டும் வருவதாக கூறி அவ்விடத்தில் இருந்து சென்றுள்ள நிலையில் அதே வீட்டிற்கு சில நிமிடத்திற்கு பின்னர் சென்ற நபர் ஒருவர் தன்னை சி.ஐ.டி என அறிமுகம் செய்து கொண்டு ரூபா 10 ஆயிரம் கப்பமாக  தந்தால் குறித்த பிரச்சினையை தீர்த்து தருவதாக சந்தேக நபரின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக தொடர்பில் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய ஞாயிற்றுக்கிழமை(06) இரவு  காத்தான்குடி  பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா  தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர் 

No comments