Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சாவகச்சேரியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவு - வியாபாரியின் மீசையும் கருகியது!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன. 

சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது. அதனால்  , அவரது மீசை தீயில் கருகியது. இருந்த போதிலும் பெரியளவிலான அனர்த்தம் ஏற்படவில்லை. 
 
அதேவேளை நேற்று மாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு அருகில் முதியவர் ஒருவர் லைட்டர் மூலம் சுருட்டை பற்ற வைக்க முனைந்த போதிலும் , லைட்டர் வெடித்துள்ளது. 
 
நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடிப்புக்கள் வெடிப்பு சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ள நிலையில் , தற்போது சாவகச்சேரியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments