ஜார்க்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்துடன் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர் பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்த வர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்





No comments