பண்டாரகம, வெல்மில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (02) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில், பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் மற்றும் கண்டியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஆகியோரே உயிரிழந்துள்ளதாகவும் இருவரும் காதலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் அதிவேகமாக சென்றதன் காரணமாக வீதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
No comments