ஆற்றில் மூழ்கிய இளம் பெண்ணை காப்பாற்ற முயன்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சீதாவக ஆற்றின் தெஹியோவிட்ட யோகம பாலத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடப்பெற்றுள்ளது.
குறித்த பகுதிக்கு சுற்றுலா சென்ற பெண்ணொருவர் ஆற்றில் நீராடிய போது நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு முயன்ற இரு இளைஞர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
அதனை கண்ணுற்ற பிரதேசவாசிகள் , நீரில் மூழ்கிய பெண் உள்ளிட்ட மூவரையும் மீட்டு அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கு அங்கு சிகிச்சை பலனின்றி இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் ராஜகிரிய மற்றும் கொழும்பு 12 பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
No comments