Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இன்று சனிக்கிழமையும் 8.30 மணித்தியாலங்கள் மின் வெட்டு


இன்று சனிக்கிழமை 8 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F வலயங்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 4 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

அந்த பகுதிகளில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை மேலும் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

G,H,I,J,K,L வலயங்களில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை 4 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

அந்த பகுதிகளில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரமும், இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 1 மணி நேரம் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

P,Q,R,S வலயங்களில் காலை 8 மணி முதல் 12 மணி வரை நான்கு மணி நேர மின் வெட்டு திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை 3 மணி நேரமும், இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை 1 மணி 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

T,U,V,W வலயங்கள் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை 4 மணி நேரமும், மாலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரமும், இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 1 மணி நேரம் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

M,N,O,X,Y,Z வலயங்களில் காலை 5.30 மணி முதல் முற்பகல் 9 மணி வரை 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு மின்தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

No comments