யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிளினுள் இருந்து பணப்பையை திருடி , அதில் இருந்த தானியங்கி அட்டை (ATM) ஊடாக மதுபானங்களை கொள்வனவு செய்தவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
மிருசுவில் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மோட்டார் சைக்கிளினுள் பண பையினை வந்து விட்டு , மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , சென்றிருந்த வேளை, மோட்டார் சைக்கிள் சீட்டினை உடைத்து பணப்பையை திருடியுள்ளனர்
பின்னர் பணப்பையை இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் , தானியங்கி அட்டை என்பவற்றை எடுத்து விட்டு , ஏனையவற்றை புத்தூர் வீதியில் வீசி சென்றுள்ளனர்
புத்தூர் பகுதியில் அநாதரவாக கிடந்த பணப்பையை கண்டெடுத்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் , அச்சுவேலியை சேர்ந்த ஊடகவியலாளர் ஊடாக பணப்பையை பறிகொடுத்த பெண்னை கண்டறிந்து அவற்றை ஒப்படைத்தார்
இருந்த போதிலும் பெண்ணின் தானியங்கி அட்டையை களவாடி சென்றவர்கள் , கைதடியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் 20 ஆயிரத்து 600 ரூபாய்க்கு மதுபானம் கொள்வனவு செய்துள்ளதாக அப்பெண்ணின் தொலைபேசிக்கு குறும்செய்தி வந்துள்ளது.
அதனை அடுத்து குறித்த பெண் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









No comments