குடும்ப தகராறு காரணமாக மாமனாரை பாரவூர்த்தியில் ஏற்றிச் சென்று அடித்து படுகொலை செய்த மருமகனை பொலிஸார் தேடி வரும் நிலையில் , கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மாத்தறை மாலிம்பட பகுதியை சேர்ந்த 43 வயதான நபர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மருமகனே அவரை பாரவூர்தியில் ஏறிச்சென்று அடித்து படுகொலை செய்துள்ளார் என கண்டறிந்துள்ளனர்.
அந்நிலையில் சந்தேகநபரான உயிரிழந்தவரின் மருமகன் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை தப்பி சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.







No comments