வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தம்புள்ளை வேமெடில்ல நீர்த்தேக்கத்தின் வான் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்ற இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
நான்கு நண்பர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 16 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர். மற்றைய மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் இன்று காலை வரையில் கால்வாயில் மிதந்துக் கொண்டிருந்துள்ளது.
தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







No comments